நவம்பர் 1 – தமிழ்நாடு நாளையொட்டி சென்னையில் மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணி – சீமான் பேரழைப்பு

322

நவம்பர் 1 – தமிழ்நாடு நாளையொட்டி சென்னையில் மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணி – சீமான் பேரழைப்பு

என் உயிரோடு கலந்து வாழ்கின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

நவம்பர் 1 – தமிழ்நாடு நாள்!

மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணி

இடம்: இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம்

நாள் : 01-11-2022 செவ்வாய்க்கிழமை
நேரம் : மாலை 3 மணிக்கு

மானத்தமிழ் மக்கள் அனைவரும் மறக்காமல் கூடுவோம்!

இந்திக்கு இங்கே ஆதிக்கமா?
எல்லோரும் வாருங்கள் நாட்டினரே!
செந்தமிழுக்கு ஒரு தீங்கு வந்த பின்பும்
இந்த தேகம் இருந்தொரு லாபமுண்டோ?

புரட்சிப்பாவலரின் அறைகூவலுக்கேற்ப அனைவரும் கூடுவோம்!

நாம் தமிழர்!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

 

நாம் தமிழர் மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணி – திரள்நிதித் திரட்டல்!

தாயவளாம் தமிழ்மொழி மீட்பில் உறவுகள் உங்களின் ஆதரவுக் கரங்களை எங்களிடத்தில் நீட்டி முயற்சியினை வலுப்படுத்துங்கள்.

நிதி பங்களிக்க: https://donate.naamtamilar.org/tamilnadu-day.html