இந்திய ஒன்றிய அளவில் நடைபெற்ற போட்டியில் வெள்ளிப்பதக்கம் பதக்கம் வென்ற நாம் தமிழர் உறவுகளுக்கு சீமான் வாழ்த்து

72

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தொகுதி மருத்துவப் பாசறையைச் சேர்ந்த அன்புத்தம்பி தியாகராஜன் அவர்களின் மகள் சினேகவர்ஷினி இந்திய ஒன்றிய அளவில் நடைபெற்ற வில்வித்தை போட்டியில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்று வெள்ளிப்பதக்கம் வென்ற செய்தியறிந்து மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைந்தேன்.

அன்புமகள் சினேகவர்ஷினி பன்னாட்டுப் போட்டிகளில் பங்குபெற்றுப் பதக்கங்கள் பல வெல்லவும், மென்மேலும் சாதனைகள் புரிந்து தமிழ் இனத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்கவும் எமது நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துகள்!

தேனி கிழக்கு மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி ஜெயக்குமார் அவர்களின் மகன் விஷ்ணுவர்தன் இந்திய ஒன்றிய அளவில் மத்தியபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தடகள போட்டியின் உயரம் தாண்டுதல் பிரிவில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்று வெள்ளிப்பதக்கம் வென்ற செய்தியறிந்து மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைந்தேன்.

அன்புமகன் விஷ்ணுவர்தன் பன்னாட்டுப் போட்டிகளில் பங்குபெற்றுப் மென்மேலும் சாதனைகள் புரிந்து தமிழ் மண்ணிற்கும், இனத்திற்கும் பெருமை சேர்க்க எமது நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துகள்!