அறிவிப்பு: ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் 117ஆம் ஆண்டு பிறந்தநாள் மலர்வணக்க நிகழ்வு (செப்.27 – சென்னை எழும்பூர்)

152

அறிவிப்பு: ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் அவர்களின் 117ஆம் ஆண்டு பிறந்தநாள் மலர்வணக்க நிகழ்வு (செப்.27 – சென்னை எழும்பூர்) | நாம் தமிழர் கட்சி

‘நாம் தமிழர்’ நிறுவனத் தலைவர், ‘தமிழர் தந்தை’ ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களின் 117ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக நாளை 27-09-2022 செவ்வாய்க்கிழமை, காலை 09:30 மணியளவில் சென்னை, எழும்பூர் பாந்தியன் சாலையில் அமைந்துள்ள ஐயா சி.பா.ஆதித்தனாரின் திருவுருவச்சிலைக்கு, மலர்வணக்கம் செலுத்தும் நிகழ்வானது, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில்
நடைபெறவிருக்கின்றது.

இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி