நமக்கான ஊடகத்தை நாமே உருவாக்கும் பொருட்டு புதிய முயற்சிகளை ஆதரிப்போம்!- செந்தமிழன் சீமான்

280

க.எண்: 2022060255

நாள்: 07.06.2022

வேல்வீச்சு இதழின் சந்தாதாரராகுங்கள்!

அன்பின் உறவுகள் அனைவருக்கும் வணக்கம். நமது அரசியல் தொடர்பயணத்தின் காட்சி ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் போலவே அச்சு ஊடகமும் அவசியமாகிறது. கட்சியின் நிகழ்வுகளை, மிக முக்கியமான முன்னெடுப்புகளை உலகமெங்கும் கொண்டுசேர்க்கின்ற வேலையை நாம் தொடர்ந்து செய்யவேண்டி உள்ளது. கட்சியின் பண்பாட்டு மீட்பு பாசறையாகிய வீரத்தமிழர் முன்னணி தனது தளத்தில் “வேல்வீச்சு” என்ற மாத இதழினை 2015 இல் இருந்து நடத்தி வருகிறது. இடையில் பெருந்தொற்று கால இடைவெளியில் தொடர இயலாமல் போனது.

வேல்வீச்சு இதழ் கட்சியின் தளத்தில் மீண்டும் செயல்பட இருக்கிறது. இந்த செயல்பாட்டை தொடர்ந்து ஆதரிக்கும் விதமாக, கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் இந்த இதழின் ஆண்டு சந்தாவினை செலுத்தி இதழ் வருகையினை உறுதிசெய்ய வேண்டுகிறேன். இந்த இதழின் ஆண்டு சந்தாவாக 450 ரூபாயும், வெளி மாநிலங்களுக்கு 500 ரூபாய் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உங்கள் சந்தா தொகையினை பின்வரும் QR குறியீட்டினை பயன்படுத்தி செலுத்திய பிறகு, தொடர்புடைய பகிரி எண்ணிற்கு அஞ்சல் முகவரியை அனுப்பிட வேண்டுகிறேன். வீரத்தமிழர் முன்னணி மற்றும் கட்சியின் பொறுப்பாளர்கள் அனைவரும் ஒருவருக்கு குறைந்தது 10 ஆண்டு சந்தாக்களை உறுதி செய்தால் இதழினை தொய்வின்றி நடத்த ஊக்கமாக இருக்கும்.

நமக்கான ஊடகத்தை நாமே உருவாக்கும் பொருட்டு புதிய முயற்சிகளை ஆதரிப்போம்.

வேல்வீச்சு இதழின் மூலமாக நடக்கும் முன்னெடுப்புகளை வாழ்த்தி மகிழ்கிறேன்.

புரட்சி வாழ்த்துகளோடு,

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

 

பணம் செலுத்த QR குறியீடு

இதழுக்கான அஞ்சல் முகவரி அனுப்ப பகிரி +91-9442248351
முனைவர் து.செந்தில்நாதன்