அறிவிப்பு: நாம் தமிழர் கட்சி – மகளிர் பாசறை முன்னெடுக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

114

க.எண்: 2022060245

நாள்: 03.06.2022

அறிவிப்பு:

நாம் தமிழர் கட்சி – மகளிர் பாசறை முன்னெடுக்கும்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்தில் மீனவப்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து மிகக்கொடூரமாக எரித்துக்கொன்ற வடமாநிலக் கொலையாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனையை உறுதிசெய்ய, அரசு தரப்பில் திறமை வாய்ந்த பெண் வழக்கறிஞரை நியமித்து, கடும் சட்டப்போராட்டங்களை நடத்தி மூன்று மாதத்திற்குள் வழக்கை முடித்து, தீர்ப்பு பெற்றுத்தரவேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்தியும், தமிழகத்தில் தொடர்ச்சியாக அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்கத் தவறிய தமிழ்நாடு அரசைக் கண்டித்தும், தமிழகத்திற்குள் நுழையும் வடமாநிலத்தவர்களுக்கு முறையான உள்நுழைவுச்சீட்டு முறையை உடனடியாக நடைமுறைப்படுத்தக் கோரியும் மாநிலம் தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தினை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் வழிகாட்டுதலின்படி, நாம் தமிழர் மகளிர் பாசறை முன்னெடுக்கவிருக்கிறது.

நாள்:
05-06-2022 ஞாயிற்றுக்கிழமை
மாலை 4 மணியளவில்

இடம்:
சமயபுரம் நான்கு சாலை, திருச்சி மாவட்டம்

தலைமை :
திருமதி. அமுதா நம்பி
(மாநில ஒருங்கிணைப்பாளர்)

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மகளிர் பாசறையின் மாநில, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், கட்சியின் மாநில, நாடாளுமன்ற, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், பிற பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும், பெண்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

நா.சந்திரசேகரன்

பொதுச்செயலாளர்

முந்தைய செய்திகாஞ்சிபுரம் தொகுதி நீர்மோர் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திஇயன்றதைச் செய்வோம்..! பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நம் ஈழச்சொந்தங்களுக்கு..! – சீமான் வேண்டுகோள்