க.எண்: 2022060273
நாள்: 20.06.2022
அறிவிப்பு:
ஆறு தமிழர்கள் விடுதலையை வலியுறுத்தியும், ‘அக்னிபத்’ திட்டத்தைக் கைவிடக்கோரியும், நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் வருகின்ற 03-07-2022 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணியளவில் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கின்றது.
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாள்: கண்டனப் பேருரை: செந்தமிழன் சீமான் |
இம்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில, மண்டல(நாடாளுமன்ற), மாவட்ட, தொகுதி, நகரம், வட்டம், பகுதி, ஒன்றியம் உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், தாய்த்தமிழ் உறவுகளும், சமூகச் செயற்பாட்டாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
- தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி