தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் நலமாக உள்ளார்!

2047

திருவொற்றியூர், அண்ணாமலை நகர் இரயில்வே கேட் பகுதி மக்களின் குடியிருப்புகள் இடிக்கப்படுவதைக் கண்டித்து, பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களை நேரில் சந்திக்கச்சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நீண்ட நேரமாக  வெயிலில் நின்றுகொண்டே செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தமையாலும், தொடர் அலைச்சல், ஓய்வின்மையாலும் சோர்வுற்றார்.

தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பினார். முழு உடல் பரிசோதனைக்குப் பிறகு வீடு திரும்பினார்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு,
நாம் தமிழர் கட்சி