அறிவிப்பு: சனவரி 02, சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – மேலப்பாளையம் (திருநெல்வேலி மாவட்டம்)

275

க.எண்: 2021120322
நாள்: 20.12.2021

அறிவிப்பு:
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
(சனவரி 2 – திருநெல்வேலி)

20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடுஞ்சிறைவாசம் அனுபவித்து வரும் இசுலாமிய சிறைவாசிகளை மதத்தினைக் காரணமாகக் காட்டி விடுதலை செய்ய மறுக்கும் திமுக அரசின் மதவாதச் செயலைக் கண்டித்தும், 30 ஆண்டுகளைக் கடந்தும் சிறைக்கொட்டடியில் வாடிக்கிடக்கும் ஏழு பேர் விடுதலையைக் கோரியும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் எதிர்வரும் 02.01.2022 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 04 மணியளவில் திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் ஜின்னா திடலில் பேரெழுச்சியாக நடைபெறவிருக்கின்றது.

நம் உறவுகளின் விடுதலையை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் இம்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்களில், கட்சியின் மாநில, மாவட்ட, தொகுதி, நகரம், வட்டம், ஒன்றியம் உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

வீறுகொண்டு வாருங்கள் தமிழர்களே!

நம் உறவுகளின் விடுதலைக்காக இணைந்து குரல் எழுப்புவோம்!

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி