சுற்றறிக்கை: அக்டோபர் 25, செங்கல்பட்டு மாவட்டப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு – தலைமை அலுவலகம்

71

க.எண்: 2021100236
நாள்: 21.10.2021

சுற்றறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு
(செங்கல்பட்டு, திருப்போரூர், மதுராந்தகம் மற்றும் செய்யூர் தொகுதிகள் மட்டும்)

செங்கல்பட்டு மாவட்டத்தின் கட்சி உட்கட்டமைப்பை மறுசீராய்வு செய்வதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்தும் கலந்தாய்வு செய்வதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், வருகின்ற 25-10-2021 திங்கட்கிழமையன்று காலை 11 மணியளவில், கட்சித் தலைமை அலுவலகத்தில் மாநிலக் கட்டமைப்புக் குழு பொறுப்பாளர்கள் முன்னிலையில் செங்கல்பட்டு மாவட்டப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு நடைபெறவிருக்கின்றது.

இக்கலந்தாய்வின் போது செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட செங்கல்பட்டு, திருப்போரூர், மதுராந்தகம் மற்றும் செய்யூர் தொகுதிளைச் சேர்ந்த அனைத்து மாநில, மாவட்ட, தொகுதி, நகரம், ஒன்றியம் மற்றும் பாசறைப் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்