அறிவிப்பு: ஊரக உள்ளாட்சித் தேர்தல் – 2021 | தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் பரப்புரைப் பயணத்திட்டம்

763

க.எண்: 2021090223
நாள்: 24.09.2021

அறிவிப்பு: ஊரக உள்ளாட்சித் தேர்தல் – 2021 | தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் பரப்புரைப் பயணத்திட்டம்

தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய நாட்களில் இரண்டு கட்டமாக நடைபெறவிருக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் “விவசாயி” சின்னத்தில் போட்டியிடுகின்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தொடர் பரப்புரை மேற்கொள்ளவிருக்கின்றார். பரப்புரைப் பயணத்திட்டத்தில் இடம்பெறும் மாவட்டங்கள் பின்வருமாறு;

நாள் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்
பரப்புரை மேற்கொள்ளும் மாவட்டங்கள்
27-09-2021

திங்கட்கிழமை

காஞ்சிபுரம், செங்கல்பட்டு
28-09-2021
செவ்வாய்க்கிழமை
இராணிப்பேட்டை, வேலூர்
29-09-2021
புதன்கிழமை
வேலூர், திருப்பத்தூர்
30-09-2021
வியாழக்கிழமை
கள்ளக்குறிச்சி, விழுப்புரம்
02-10-2021
சனிக்கிழமை
திருநெல்வேலி, தென்காசி

பரப்புரை மேற்கொள்ளவிருக்கும் இடங்கள் மற்றும் நேர அட்டவணை விரைவில் வெளியிடப்படும். பரப்புரையின் போது அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் வேட்பாளர் படம், விவசாயி சின்னம் பொறித்த உடைகள் அணிந்து கைப்பதாகைகளோடு பெருந்திரளாகப் பேரெழுச்சியோடு பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நா.சந்திரசேகரன்
 பொதுச்செயலாளர்
நாம் தமிழர் கட்சி