2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இணையவழியில் கலந்தாய்வு

302

க.எண்: 2021050162
நாள்: 30.05.2021

சுற்றறிக்கை:
2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இணையவழியில் கலந்தாய்வு

நடைபெற்று முடிந்த 2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்தும், தேர்தல் பரப்புரைக் களப்பணிகள் குறித்தும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்தும் கலந்தாய்வு செய்வதற்காக, அனைத்து தொகுதி வேட்பாளர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இணையவழியில் கலந்தாய்வு மேற்கொள்ளவிருக்கின்றார்.

முதற்கட்டமாக வருகின்ற 02-06-2021 புதன்கிழமையன்று காலை 11 மணியளவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில், மாநிலக் கட்டமைப்புக் குழு பொறுப்பாளர்கள் முன்னிலையில் இராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்குட்பட்ட தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கான இணையவழிக் கலந்தாய்வு நடைபெறவிருக்கின்றது.

இக்கலந்தாய்வின் போது மேலே குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டங்களுக்குட்பட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அனைத்து நாம் தமிழர் வேட்பாளர்களும், மாநிலக் கட்டமைப்புக் குழுவினரும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேற்கண்ட இணையவழிக் கலந்தாய்வுக்கான சூம் (ZOOM Meeting) கூட்ட அடையாள எண் மற்றும் கடவுச்சொல் உள்ளிட்ட விவரங்களை, கலந்தாய்விற்கு ஒருநாள் முன்னதாகப் பங்கேற்கவிருக்கும் வேட்பாளர்களுக்குத் தனிப்பட்ட முறையில் பகிரி / மின்னஞ்சல் வாயிலாக அனுப்பிவைக்கப்படும். விவரங்கள் கிடைக்கப்பெறாதவர்கள் மாநிலக் கட்டமைப்பு குழுப் பொறுப்பாளர்களைத் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளவும்.

 

நா.சந்திரசேகரன்

பொதுச்செயலாளர்