வரலாற்றுச் சிறப்புமிக்க பெருநகர்வு! – கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு சீமான் வாழ்த்து

168

கேரள முதல்வராக, தொடர்ந்து இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றிருக்கும் ஐயா பினராயி விஜயன் அவர்களுக்கும் அவரது தலைமையிலான அமைச்சரவையினருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கேரள மாநிலத்தில் கொரோனா பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் ஐயா பினராயி விஜயன் தலைமையிலான அரசு திறம்பட செயற்பட்டு கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் மற்ற மாநிலங்களுக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள ஐயா பினராயி விஜயன் அவர்கள் முன்பைவிட மிகச்சிறப்பானதொரு நல்லாட்சியை வழங்கிட வாழ்த்துகிறேன்.

மேலும் சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் தனது புதிய அமைச்சரவையில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஐயா கே.இராதாகிருஷ்ணன் அவர்களை தேவசம் வாரிய அமைச்சராக நியமித்தது பாராட்டுதற்குரிய வரலாற்றுச் சிறப்புமிக்க பெருநகர்வாகும்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Congratulations for a Successful Second Term!

My heartiest congratulations to Mr. Pinarayi Vijayan for his record 2nd term as Chief Minister of Kerala! I also extend my congratulations to the whole cabinet ministers including the first-time ministers as well.

The State of Kerala, under his remarkable leadership, has been in headlines for all good reasons in handling COVID-19 crisis, and continue to be a role model to other states in handling new challenges posed by COVID-19.

I also applaud Mr. Pinarayi Vijayan’s historic move to uphold social justice by appointing senior CPM leader K. Radhakrishnan as the minister for Devaswom in the new cabinet, who belongs to one of the oppressed communities. I wish Mr. Pinarayi Vijayan to deliver an even more better tenure than the previous one.

முந்தைய செய்திபரமக்குடி தொகுதி தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு
அடுத்த செய்திசோளிங்கர் தொகுதி – கபசுர குடிநீர் வழங்குதல்