புதுச்சேரி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டக் களப்போராளிகளுடன் சீமான் கலந்தாய்வு 

258

செய்திக்குறிப்பு: 2021 தேர்தல் களப்பணிகள் குறித்து புதுச்சேரி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டக் களப்போராளிகளுடன் சீமான் கலந்தாய்வு  | நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

சட்டமன்றத் தேர்தல்-2021 வேட்பாளர்கள் தேர்வு மற்றும் களப்பணிகள் குறித்து அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொள்வதற்காக சனவரி 22 முதல் 31 வரை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மண்டலவாரியாக தஞ்சாவூர், திருநெல்வேலி, மதுரை, விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், வேலூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றுவரும் கலந்தாய்வுக் கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்.

தஞ்சாவூர், திருநெல்வேலி, மதுரை மண்டலக் கந்தாய்வுகள் முடிவடைந்த நிலையில் இன்று 26-01-2021 காலை 10 மணியளவில் விக்கிரவாண்டி வெங்கடேசுவரா நவீன அரிசி ஆலை வளாகத்தில் நடைபெற்ற  புதுச்சேரி மாநிலம் மற்றும் திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.

நாளை 27-01-2021 காலை 10 மணியளவில் கோயம்புத்தூர், அவினாசி சாலையில் அமைந்துள்ள பிருந்தாவன் கார்டன் திருமண மண்டபத்தில் நடைபெறவிருக்கும் கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடனான கலந்தாய்வில் பங்கேற்கவிருக்கிறார்.

எதிர்வரும் 30-01-2021 சனிக்கிழமையன்று பிற்பகல் 03 மணியளவில் வேலூர் மாநகராட்சி அலுவலகம் அருகில் அமைந்துள்ள தண்டபாணி திருமண மண்டபத்தில் இராணிபேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடனான கலந்தாய்வு நடைபெறவிருக்கிறது.

இறுதியாக எதிர்வரும் 01-02-2021 திங்கட்கிழமையன்று பிற்பகல் 03 மணியளவில் செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் அமைந்துள்ள என்.பி.சி.திருமண மண்டபத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடனான கலந்தாய்வு நடைபெறவிருக்கிறது.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

முந்தைய செய்திபுதுக்கோட்டை தொகுதி -கறம்பக்குடி தெற்கு ஒன்றியம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திதிருமயம் தொகுதி – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு