பெருந்தமிழர் ஐயா கக்கன் அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – சீமான் செய்தியாளர் சந்திப்பு

100

செய்திக்குறிப்பு: நேர்மையின் நேர்வடிவம் பெருந்தமிழர் ஐயா கக்கன் அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு  | நாம் தமிழர் கட்சி

சிங்களப் பேரினவாத அரசால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து 2010 ஆம் ஆண்டுச் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் “நீ என் மீனவனை அடித்தால், நான் உன் மாணவனை அடிப்பேன்” என்று பேசியதற்காகத் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார். பின், அவ்வழக்கில் தேசியப் பாதுகாப்புச் சட்டம் செல்லாது என நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். பிறகு அதே ஆர்ப்பாட்டத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி 10 நிமிடம் அதிகம் பேசியதாகச் சென்னை மாநகரக் காவல்துறையால் 2018 ஆம் ஆண்டு மீண்டும் ஒரு வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. அவ்வழக்கின் விசாரணைக்காக இன்று (23-12-2020) காலை 10 மணியளவில் சென்னை ஜார்ஜ் டவுனில் அமைந்துள்ள பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சீமான் அவர்கள் நேர் நின்றார்.

செய்தியாளர் சந்திப்பு:

2021 சட்டமன்றத் தேர்தலில் ரஜினி, கமலை அடிக்கிற அடியில் இனி எந்த நடிகருக்கும் அரசியலுக்கு வரும் எண்ணமே வரக்கூடாது. நடிப்பது மட்டுமே நாடாளுவதற்கான தகுதி என்பதை இந்த தேர்தலோடு மறந்து விட வேண்டும்!

– இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

அதனைத்தொடர்ந்து, நேர்மையின் நேர்வடிவம் பெருந்தமிழர் நமது ஐயா கக்கன் அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி காலை 11 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகம், இராவணன் குடிலில் நடைபெற்ற மலர்வணக்க நிகழ்வில் சீமான் அவர்கள் பங்கேற்று கக்கன் திருவுருவப்படத்திற்கு முன் நினைவுச் சுடரேற்றி மலர்வணக்கம் புகழ் வணக்கம் செலுத்தினார்.

செய்தியாளர் சந்திப்பு: https://www.youtube.com/watch?v=BgifQXvGXKQ


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084