அண்ணல் அம்பேத்கர் 64ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – தலைமையகம்

191

அறிவிப்பு: அண்ணல் அம்பேத்கர் 64ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – தலைமையகம் | நாம் தமிழர் கட்சி

இந்திய அரசியல் சாசனத்தை வகுத்த பேராசான்! உலகெங்கிலும் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குறியீடு! இழந்துவிட்ட உரிமைகளைப் பிச்சைக்கேட்டுப் பெறமுடியாது; போராடித்தான் பெற்றாகவேண்டும். கற்பி! ஒன்று சேர்! புரட்சி செய்! என்று போதித்த புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களினுடைய 64ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 06-12-2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில், தலைமை அலுவலகமான இராவணன் குடிலில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெறவிருக்கிறது.

இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084