சுற்றறிக்கை:  தலைவர் பிறந்தநாளில் குருதிக்கொடை முகாம்கள் நடத்துதல் தொடர்பாக

135

க.எண்: 202011470
நாள்: 19.11.2020

சுற்றறிக்கை: தலைவர் பிறந்தநாளில் குருதிக்கொடை முகாம்கள் நடத்துதல் தொடர்பாக

தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66ஆம் ஆண்டு பிறந்தநாளை (நவம்பர் 26) முன்னிட்டு, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின்படி நாம் தமிழர் கட்சியின் மருத்துவர் பாசறை மற்றும் குருதிக்கொடைப் பாசறை இணைந்து முன்னெடுத்துவரும் குருதிக்கொடை முகாம்கள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் ஆண்டுதோறும் எழுச்சியோடு நடைபெற்றுவருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெவ்வேறு நாட்களில் குருதிக்கொடை முகாம்கள் மிகச்சிறப்பாக உணர்வெழுச்சியோடு நடைபெறவிருக்கிறது.

அவ்வாறு தங்கள் பகுதிகளில் குருதிக்கொடை முகாமை முன்னெடுத்து நடத்தும் பொறுப்பாளர்கள் முகாம் நடைபெறும் நாள், இடம், மாவட்டம், தொகுதி, பொறுப்பாளர் மற்றும் முகாம்களில் குருதிக்கொடை வழங்குபவர்களின் பெயர், வயது, குருதிப் பிரிவு மற்றும் தொடர்பு எண் உள்ளிட்ட தகவல்களை kuruthikodai@naamtamilar.org என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாக தலைமை அலுவலகத்திற்குத் தெரியப்படுத்தவும்.

குருதிக்கொடைப் பாசறை சார்பாக குருதிக்கொடையாளர்களுக்கு வழங்கவேண்டிய ‘உயிர்நேய மாண்பாளர்’ சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள, முகாம்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பாளர்கள் தலைமை அலுவலகத்திற்கு நேரில் அல்லது தொலைபேசி வாயிலாக தொடர்புகொள்ளுங்கள். சான்றிதழ்கள் உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

 

மேலும், முகாம் நடைபெறும் இடங்களில் கண் கொடை வழங்குதல் தொடர்பான படிவங்கள் மற்றும் தூண்டறிக்கை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முகாம்களில் பங்கேற்பவர்கள் அனைவரும் கொரோனா நோய்த்தொற்றுக்கால விதிகளுக்குட்பட்டு முகவுறை, கையுறை அணிந்து தனிமனித இடைவெளியை உறுதியாகப் பின்பற்றிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குருதிக்கொடை முகாம் பொறுப்பாளர்கள்:
புதுச்சேரி        அமுதன் – 9043214123
சென்னை        சுகுமார் – 9841186128
மணி – 8122540511

கோவை         மணி – 9894347444
மரிய அவினாசு – 9629590602

கன்னியாகுமரி    சுரேஷ் – 6380422616

நாமக்கல்        சாமிநாதன் – 8825293305

கடலூர்/நெய்வேலி      மோகன் – 9566575582

மேலும் தொடர்புக்கு: அரிமா மு.ப.செ.நாதன் (+91-7667412345)
குருதிக்கொடைப் பாசறை – மாநில ஒருங்கிணைப்பாளர்

  • தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
    நாம் தமிழர் கட்சி