சுற்றறிக்கை: நாம் தமிழர் உறவுகளுக்கு முக்கிய கோரிக்கை

207

க.எண்: 202011462
நாள்: 06.11.2020

சுற்றறிக்கை:

அன்பின் உறவுகளுக்கு!

வணக்கம்.

எதிர்வரும் நவம்பர் 26 அன்று, நமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது பிறந்த நாளாகும். அத்திருநாள் தமிழர்களின் எழுச்சி நாளாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. பிறந்த நாள் கொண்டாடும் மரபற்ற தமிழ்ச்சமூகத்தில் விதிவிலக்காக, தலைவர் பிறந்த நாளை மட்டுமே கொண்டாடி வருகிறோம். வேறு எவரது பிறந்த நாளையும் நாம் கொண்டாடுவதில்லை. இந்தாண்டும் அந்நாளை வெகுசிறப்பாகக் கொண்டாடவிருக்கிறோம்.

இந்நிலையில், நவம்பர் 08 அன்று, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களது பிறந்த நாள் வருகிறது. அந்நாளைக் கொண்டாடுவதுமில்லை என்றாலும்கூட, அன்பின் வெளிப்பாடாய் கட்சி உறவுகளும், தமிழ்ச் சொந்தங்களும் வாழ்த்துச் சொல்ல இல்லத்திற்கு வருகை தருவதும், வருகிறவர்களுக்கு உணவளித்து மகிழ்வதும் மட்டும் வழமையாக நடைபெற்று வந்தது. கொரோனாவின் தாக்கம் குறையாத இக்காலக்கட்டத்தில் நேரில் சந்திக்க இல்லத்திற்கு வருவதையும், ஒன்றுகூடுவதையும் தவிர்க்க வேண்டியதும் பேரவசியமாகிறது. 

ஆகவே, இப்பேரிடர் காலக்கட்டத்தில் இத்தகைய நிகழ்வுகளைத் தவிர்த்து, உங்களது அன்பினையும், வாழ்த்தினையும் இல்லத்தில் இருந்தபடியே தெரிவித்திடுமாறு கோருகிறோம்.

  • தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

 

 

 

முந்தைய செய்திமதுரை வடக்கு தொகுதி -மருதுபாண்டியர்களுக்கு வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திதிருவண்ணாமலை தெற்கு மாவட்டம் – வள்ளலார் புகழ் வணக்கம்