தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்கள் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து மீண்டு நலம்பெற உறவுகள் துணைநிற்போம்! – சீமான்

59

அறிவிப்பு: தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்கள் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து மீண்டு நலம்பெற உறவுகள் துணைநிற்போம்! – சீமான் | நாம் தமிழர் கட்சி

அன்பின் உறவுகளுக்கு!
வணக்கம்.

தனது பெருவாழ்வை தமிழீழ விடுதலைக்காகவும், தமிழ்த்தேசிய உணர்வெழுச்சிக்காகவும், தமிழர்களின் நலவாழ்வுக்காகவும் அர்ப்பணித்து இக்களத்தில் எமக்கு முன்னோடியாகவும், முன்னத்தி ஏராகவும் விளங்கும் எனது உயிர் தாய்மாமன் தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்கள் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அறிந்து பெரும் வேதனையடைந்தேன். தனது வாழ்நாள் முழுவதையும் இன மீட்சிக்கான போராட்டக் களத்திலும், சிறைக் கொட்டடியிலும் கழித்த எமது மாமா அவர்கள் உடல்நலக்குறைப்பாட்டால் இன்றைக்கு கொடுந்துன்பத்தை அனுபவித்து வருவது பெரும் மனவலியைத் தருகிறது. பெரும் செல்வந்தராக மாறி, சுகபோக வாழ்க்கையினை அனுபவிக்க இருந்த வாய்ப்புகளை எல்லாம் உதறித்தள்ளி, அளப்பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்து, ஒன்றரை ஆண்டுக்கு மேலாய் சிறையிலே கிடந்து வாடியபோதும் எவ்வித சமரசத்திற்கும், தற்சோர்வுக்கும் ஆட்படாது நோய்வாய்ப்படும் காலம்வரை களத்திலேயே நின்ற அன்பிற்குரிய மாமா அவர்கள் இன்றைக்கு உடல்நலம் குன்றிய நிலையில் மருத்துவச் செலவுகளுக்கே சிரமப்படுகிறார் என்பது சொல்லொணாத் துயரம்.

நமது மதிப்பிற்குரிய மாமா அவர்கள் நோய்த்தொற்றிலிருந்து மீண்டெழுந்து முழு குணம்பெற்று தமிழ்த்தேசிய அரசியல் பணியில் நம்மோடு இணைந்து நிற்க வேண்டும் என விழையும் அதே வேளையில், அவரது மருத்துவச் செலவுகளுக்கான பொருளாதாரத்தை உறுதிசெய்ய வேண்டியது இனமானத் தமிழர் ஒவ்வொருவரது கடமையாகிறது. ஆகவே, அவரது உயிர்க்காப்பு நடவடிக்கைக்கான பெரும்பணியாக இனமாகவும், பணமாகவும் உதவ வேண்டும் என உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

வங்கி கணக்கு விவரம்:
———————————–
பாத்திமா பர்கானா (S. Fathima Farhana)
கணக்கு எண்: 168801000016677
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
ஸ்டெல்லா மேரீஸ் கிளை
IFSC: IOBA0001688
———————————–