தலைமை அலுவலக அறிவிப்பு:

30

இயற்கை வேளாண்மையில் ஈடுபடுதல், ஒருங்கிணைந்த பண்ணை அமைத்தல், கூட்டுத்தொழில் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் நமது கட்சியினர் பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.
இவையாவுமே தனிமனிதர்கள் தங்களுடைய இயற்கை சார்ந்த, தொழில் சார்ந்த ஈடுபாட்டினால் முன்னெடுக்கும் தனிப்பட்ட நடவடிக்கைகளாகும்.
இவற்றில் பங்கேற்கும் ஆர்வலர்கள் தாங்கள் பங்கேற்கும் தொழில் குறித்த முழுமையான விழிப்புணர்வுடன் சுயமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.

தனிமனிதர்கள் மேற்கொள்ளும் தொழிலுக்கும், கட்சிக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. எனவே இவற்றில் ஏற்படும் தொழில் சார்ந்த இலாப , நட்ட இழப்புகளுக்கும், வழக்குகளுக்கும் கட்சி ஒருபோதும் பொறுப்பேற்காது என தெளிவாக அறிவுறுத்தப்படுகிறது.

நாம் தமிழர் கட்சி
தலைமை அலுவலக செய்திக்குறிப்பு.