சுற்றறிக்கை: மே-18, இன எழுச்சி நாளையொட்டி தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் குருதிக்கொடை வழங்குதல் தொடர்பாக

208

நாள்: 15.05.2020

சுற்றறிக்கை: மே-18, இன எழுச்சி நாளையொட்டி தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் குருதிக்கொடை வழங்குதல் தொடர்பாக

குருதிக்கொடையின் ஒவ்வொரு துளியும் உயிர் காக்கும்! மக்களை ஒன்றிணைக்கும்! என்ற உயரிய நோக்கில் கடந்த 9 வருடங்களாக சிறப்பாக செயற்பட்டுவரும் நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடைப் பாசறை சார்பாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வெவ்வேறு நாட்களில் குருதிக்கொடை முகாம்கள் மிகச்சிறப்பாக உணர்வெழுச்சியோடு நடத்தப்பட்டுவருகிறது.

அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் வருகின்ற மே-18, இன எழுச்சி நாளையொட்டி தமிழகம் முழுவதும் மாபெரும் குருதிக்கொடை முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக, கொரொனா நோய்த்தொற்று பரவல் காரணமாக போடப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் குருதிக்கொடை முகாம்கள் நடத்த இயலாமற் போனது. எனினும் இப்பேரிடர் காலத்தில் நமது உறவுகள் தன்னெழுச்சியாக தங்கள் பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் குருதிப் பற்றாக்குறையைப் போக்க தொடர்ச்சியாக குருதிக்கொடை அளித்து வருகின்றனர்.

அதே போன்று வருகின்ற மே-17 மற்றும் மே-18 ஆகிய இரண்டு நாட்களிலும் தங்கள் பகுதிகளில் உள்ள அரசுப் பொது மருத்துவமனைகளுக்குச் சென்று பாதுகாப்பான முறையில் முகக்கவசம் அணிந்து சமூக விலகலைக் கடைபிடித்து குருதிக்கொடை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அவ்வாறு தங்கள் பகுதிகளில் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வை ஒருங்கிணைக்கும் மாவட்ட/தொகுதி/பகுதிப் பொறுப்பாளர்கள் குருதிக்கொடை அளித்த தகவல்களை   kuruthikodai@naamtamilar.org என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாக தலைமை அலுவலகத்திற்குத் தெரியப்படுத்தவும்.

தொடர்புக்கு:

அரிமா மு.ப.செ.நாதன் (+91-76674 12345)

குருதிக்கொடைப் பாசறை – மாநில ஒருங்கிணைப்பாளர்

நா.சந்திரசேகரன்

 பொதுச்செயலாளர்

முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி
அடுத்த செய்திஅரசு தலைமை மருத்துவமனையில் குருதி கொடை வழங்கும் நிகழ்வு.. ஈரோடு