சுற்றறிக்கை: குருதிக்கொடைப் பாசறை – கட்டமைப்புத் தொடர்பாக

64

சுற்றறிக்கை: குருதிக்கொடைப் பாசறை – கட்டமைப்புத் தொடர்பாக | நாம் தமிழர் கட்சி | க.எண்: 2020030072
குருதிக்கொடையின் ஒவ்வொரு துளியும் உயிர்காக்கும்! மக்களை ஒன்றிணைக்கும்! என்ற உயரிய நோக்கில் கடந்த 9 வருடங்களாக சிறப்பாக செயற்பட்டுவரும் நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடைப் பாசறையின் மூலம் குருதிக்கொடை வழங்குதல் மற்றும் பெறுதலை எளிமைப்படுத்துவதற்காகவும் முறைப்படுத்துவதற்காகவும் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதும் விரிவுபடுத்துவதும் காலத்தேவையாகிறது.

ஆதலால், குருதிக்கொடைப் பாசறைக்கு தொகுதிச் செயலாளர், தொகுதி இணைச் செயலாளர், தொகுதி துணைச் செயலாளர் என்ற முறையில் குருதிக்கொடையில் ஈடுபாடும், ஆர்வமும் உள்ளவர்களை, மாவட்ட/தொகுதிப் பொறுப்பாளர்கள் தெரிவுசெய்து அவர்களது விவரங்களைச் சேகரித்து, கீழ்க்கண்ட தொடர்பு எண்ணில் தலைமை அலுவலகத்திற்குத் தொடர்பு கொண்டு பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தொடர்புக்கு:
அரிமா மு.ப.செ.நாதன் (+91-76674 12345)
குருதிக்கொடைப் பாசறை – மாநில ஒருங்கிணைப்பாளர்
kuruthikodai@naamtamilar.org

நா.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்