க.எண்: 2020030079
நாள்: 21.03.2020
அவசர அறிவிப்பு:
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்க மானுட குலமே போராடிக் கொண்டிருக்கும் சூழலில் அதற்கேற்ற விழிப்புணர்வும், மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் பேரவசியமாகிறது. அதன்பொருட்டு, வரும் மார்ச் 31ஆம் தேதி வரை நாம் தமிழர் கட்சியின் அனைத்து நிகழ்வுகளும், செயற்பாடுகளும் நிறுத்தி வைக்கப்படுகிறது. அதுவரை எந்தவொரு நிகழ்வையும் முன்னெடுக்க வேண்டாமென நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலை பொறுப்பாளர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு