சுற்றறிக்கை: திருமுருகப் பெருவிழா – சாமி மலை (கும்பகோணம்) | வீரத்தமிழர் முன்னணி
பண்பாட்டுப் புரட்சி இல்லாது; அரசியல் புரட்சி வெல்லாது! என்கிற நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணியின் தத்துவ முழக்கத்திற்கேற்ப தலைநிலக் குறிஞ்சி தந்த தலைவன், தமிழ் இறைவன்! நமது முப்பாட்டன்! முருகப் பெருந்தகையின் புகழ் போற்றும் திருமுருகப் பெருவிழா, வருகின்ற 09-02-2020 ஞாயிற்றுக்கிழமை, முப்பாட்டனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தையடுத்த சாமிமலையில், வீரத்தமிழர் முன்னணி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பம், காவடியாட்டம், மயிலாட்டம், பறையிசை என அனைத்துக்கலைகளும் அணிவகுக்க திருமுருகன் ஊர்வலம் நடைபெறவிருக்கிறது. அன்று மாலை 4 மணியளவில் அரும்பெரும் அறிஞர்களின் சொற்பொழிவுகள் நிறைந்த திருமுருகன் பெருவிழாப் பொதுக்கூட்டமும் மிகச்சிறப்பாக கொண்டாடப்படவிருக்கிறது.
இப்பெருவிழாவிற்கு நாம் தமிழர் கட்சியின் மாநில, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள் மற்றும் வீரத்தமிழர் முன்னணி, இளைஞர், மாணவர், மகளிர், மருத்துவர், குருதிக்கொடை, வழக்கறிஞர், உழவர், தொழிலாளர், வணிகர், தகவல் சுற்றுச்சூழல், கையூட்டு-ஊழல் ஒழிப்பு, தொழில்நுட்பம், மழலையர் உள்ளிட்ட அனைத்து பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புக்கு:
முனைவர் செந்தில்நாதன் +91-94422 48351,
மாநில ஒருங்கிணைப்பாளர், வீரத்தமிழர் முன்னணி