அறிவிப்பு: தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் பொங்கல் விழா – தலைமையகம்

28

அறிவிப்பு: தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் பொங்கல் விழா – தலைமையகம் | நாம் தமிழர் கட்சி

தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளை முன்னிட்டு நாம் தமிழர் – மகளிர் பாசறை முன்னெடுக்கும் பொங்கல் விழா 12-01-2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான இராவணன் குடிலில் நடைபெறவிருக்கிறது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று விழாவைச் சிறப்பிக்கிறார்.

இவ்விழாவில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த நாம் தமிழர் உறவுகள் அனைவரும் பெண்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் பங்கேற்க வேண்டுமாயின் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இடம்: இராவணன் குடில், எண்: 8, மருத்துவமனைச் சாலை, செந்தில்நகர், சின்னப்போரூர், சென்னை – 600116
https://goo.gl/maps/FgShC6MqpEG2


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி