அறிவிப்பு: சன.29, இயற்கை உழவர் மூன்றாமாண்டு நெல் அறுவடைத் திருவிழா – உலகம்பட்டி (சிவகங்கை)

786

அறிவிப்பு: சன.29, இயற்கை உழவர் மூன்றாமாண்டு நெல் அறுவடைத் திருவிழா – உலகம்பட்டி (சிவகங்கை) | நாம் தமிழர் கட்சி

இயற்கை உழவர் மூன்றாம் ஆண்டு நெல் அருவடைத் திருவிழா வருகின்ற 29-01-2020 புதன் கிழமையன்று காலை 09 மணியளவில் சிவகங்கை மாவட்டம், உலகம்பட்டி, ஞானியார் மடத்தில் அமைந்துள்ள நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இயற்கை விவசாயி உ.சிவராமன் அவர்களின் வயலில் நடைபெறவிருக்கிறது. விழாவின் தொடக்கமாக இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் மற்றும் நெல் ஜெயராமன் ஆகியோருக்கு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வும் அதனைத்தொட்ர்ந்து நெல் அறுவடை செய்யும் நிகழ்வும் நடைபெறவிருக்கின்றது.

இவ்விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றவிருக்கிறார்.

நெல் அறுவடைத் திருவிழாவில் நாம்தமிழர் உறவுகள், உழவர் பாசறை பொறுப்பாளர்கள் பெரும்திரளாக பங்கேற்று, பயன்பெற்று விழாவை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: அம்பத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திஅறிவிப்பு: பிப்.09, திருமுருகப் பெருவிழா – சாமி மலை (கும்பகோணம்) | வீரத்தமிழர் முன்னணி