முக்கிய அறிவிப்பு : ஐயா பெ.மணியரசன் அவர்களின் தாயார் மறைவு – புகழ் வணக்கம் செலுத்த சீமான் விரைகிறார்

477

முக்கிய அறிவிப்பு :

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் ஐயா பெ.மணியரசன் அவர்களின் தாயார் பெ.பார்வதியம்மாள் அவர்களின் மறைவையொட்டி. புகழ் வணக்கம் செலுத்துவதற்காகவும், பெருமாட்டியை இழந்துவாடும் ஐயா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் பகிரவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று 12.11.2019 செவ்வாய்க்கிழமை மாலை 07 மணியளவில், தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஊராட்சிக்குட்பட்ட செங்கிப்பட்டியில் அமைந்துள்ள ஐயா பெ.மணியரசன் அவர்களின் இல்லத்திற்குச் செல்லவிருக்கின்றார்.

அவ்வயம் தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நாம் தமிழர் உறவுகள் அனைவரும் மறைந்த பெருமாட்டிக்குப் புகழ் வணக்கம் செலுத்த செங்கிபட்டியில் ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சிஐயா பெ.மணியரசன் தாயார் மறைவு – சீமான் இரங்கல்.

தமிழ்த்தேசிய இன விடுதலைக்கும், தமிழ்த்தேசியக் கருத்தாக்கம் வலுப்பெறவும் பன்னெடுங்காலமாகக் களப்பணியும், கருத்தியல் பரப்புரையும் செய்து நாளும் விடியலுக்காய் உழைத்துக் கொண்டிருக்கிற எங்களது தத்துவப்பேராசான், முன்னத்தி ஏராக நின்று வழிகாட்டும் அறிவுத்தந்தை எங்கள் ஐயா பெ.மணியரசன் அவர்களை ஈன்றெடுத்த எங்களது தாயார் பெ.பார்வதியம்மாள் அவர்கள் மறைவுற்ற செய்திகேட்டு மிகுந்த துயருற்றேன். அம்மாவை இழந்து வாடும் ஐயாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து அவர்களது துயரத்தில் நானும் ஒருவனாய் பங்கெடுக்கிறேன். ஐயாவை தமிழ்ச்சமூகத்திற்குத் தந்த அந்தப் பெருமாட்டியின் மறைவு என்பது ஈடுசெய்ய முடியாதப் பேரிழப்பாகும். அம்மாவுக்கு எனது வணக்கத்தை உரித்தாக்குகிறேன்!

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅறிவிப்பு: நவ.27, இன எழுச்சிப் பெருங்கூட்டம் – (ஒத்தக்கடை)மதுரை
அடுத்த செய்திசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டக் கலந்தாய்வு