சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டக் கலந்தாய்வு

24

க.எண்: 2019110174
நாள்: 08.11.2019

சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் மாவட்டவாரியாக கலந்தாய்வு
(கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்கள்)

நமது கட்சியின் உட்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக் குழு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாவட்டவாரியாக அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டுவருகின்றனர். கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களுக்கான கலந்தாய்வு வருகின்ற 10-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவிருக்கின்றது.

நாள் நேரம் கலந்தாய்வுக்கான தொகுதிகள் கலந்தாய்வு நடைபெறும் இடம்
10-11-2019
ஞாயிறு
காலை 09 மணியளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் என்.எஸ்.கே. லேண்ட் மார்க் (NSK Landmark),
சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை,
கிருஷ்ணகிரி
பிற்பகல் 03 மணியளவில் தருமபுரி மாவட்டம் டி.என்.ஜி தங்குமிடம் (DNG Residency),
கிருஷ்ணகிரி முதன்மை சாலைகுண்டல்பட்டி, தருமபுரி

மாவட்டக் கலந்தாய்வின் போது மாநிலக் கட்டமைப்புக் குழுவினர் மற்றும் அந்தந்த மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து தொகுதிகளைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நா.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்

முந்தைய செய்திசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் வேலூர் மாவட்டக் கலந்தாய்வு
அடுத்த செய்திமரக்கன்றுகள் வழங்கும் விழா-குமராபாளையம்