சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் தாம்பரம் மற்றும் பல்லாவரம் தொகுதிகளுக்கான கலந்தாய்வு

26

க.எண்: 2019110234
நாள்: 23.11.2019

சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் தாம்பரம் மற்றும் பல்லாவரம் தொகுதிகளுக்கான கலந்தாய்வு

நமது கட்சியின் உட்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக் குழு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாவட்டவாரியாக அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டுவருகின்றனர். கடந்த 18-11-2019 அன்று நடைபெற்ற காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கான கலந்தாய்வின் போது நேரமின்மையால் முற்றுபெறாத தாம்பரம் மற்றும் பல்லாவரம் தொகுதிகளுக்கான கலந்தாய்வு நாளை 24-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவிருக்கின்றது.

நாள் நேரம் கலந்தாய்வுக்கான தொகுதிகள் கலந்தாய்வு நடைபெறும் இடம்
24-11-2019
ஞாயிறு
மாலை 05 மணியளவில் தாம்பரம் மற்றும் பல்லாவரம் தொகுதிகள் இலட்சுமி மஹால்
செம்பாக்கம் நகராட்சி

தொகுதிக் கலந்தாய்வின் போது மாநிலக் கட்டமைப்புக் குழுவினர் மற்றும் அந்தந்த தொகுதிகளைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

நா.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஎதேச்சதிகாரப்போக்கின் மூலம் மராட்டியத்தில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியிருப்பது மாபெரும் சனநாயகப் படுகொலை! – சீமான் கண்டனம்
அடுத்த செய்திதமிழர் – சீக்கியர் முதல் ஆண்டு கருத்தரங்கு – சென்னை