சுற்றறிக்கை: உள்ளாட்சித் தேர்தல் விருப்ப மனு பெறுவதற்கான காலநீட்டிப்பு

934

க.எண்: 2019110221

நாள்: 13.11.2019

சுற்றறிக்கை: உள்ளாட்சித் தேர்தல் விருப்ப மனு பெறுவதற்கான காலநீட்டிப்பு | நாம் தமிழர் கட்சி

 

எதிர்வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஏற்கனவே அறிவித்ததை போல தனித்துப் போட்டியிடவிருக்கிறது. இதற்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்றுவருவதால் கட்சி சார்பில் போட்டியிடக்கூடிய உள்ளாட்சிப் பொறுப்புகளுக்கு நமது கட்சி சார்பாக போட்டியிட விரும்பும் உறவுகள், உள்ளாட்சிப் பொறுப்புகளை குறிப்பிட்டு முழுப்பெயர், முகவரி உள்ளிட்ட உரிய தகவல்களுடன் புகைப்படம், வாக்காளர் அடையாள அட்டை நகல், கட்சி உறுப்பினர் அடையாள அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து விருப்ப மனுவை தத்தம் தொகுதிச் செயலாளர் / தொகுதித் தலைவரிடம் உடனடியாக வழங்குமாறும் அவ்வாறு பெறப்படும் விருப்ப மனுக்களை தொகுதித் தலைவர் மற்றும் தொகுதிச் செயலாளர் இணைந்து சேகரித்து, 10-11-2019க்கு முன்னதாக கட்சித் தலைமை அலுவலகத்தில் உரிய முறையில் சேர்க்கும்படியும் கடந்த 03.11.2019 அன்று சுற்றறிக்கை (க.எண் 2019110171) வெளியிடப்பட்டது.

இதுவரை பெறப்பட்ட விருப்ப மனுக்கள் மற்றும் அதன் தகவல்களின் அடிப்படையில் தலைமை அலுவலகத்தில் தெரிவு செய்யப்பட்டு வருகின்றது. விருப்ப மனுக்கள் பெறுவதற்கான காலம் 18-11-2019 திங்கட்கிழமை வரை காலநீட்டிப்பு செய்யப்படுகிறது.

மாதிரி விருப்ப மனு படிவம் நமது கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://www.naamtamilar.org) இருந்து தரவிறக்கம் செய்துகொள்ளவும்.

நா.சந்திரசேகரன்

பொதுச்செயலாளர்

முந்தைய செய்திசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டக் கலந்தாய்வு
அடுத்த செய்தி‘ரஜினிகாந்த்தின் ஆளுமை அரைமணி நேரம்கூட தாக்குப்பிடிக்கவில்லை’ –  சீமான் ஆவேசம் .