நாங்குநேரி இடைத்தேர்தல் சீமான் தொடர்ப் பரப்புரை – இன்றையப் பயணத்திட்டம்  (15-10-2019)

34

செய்திக்குறிப்பு: நாங்குநேரி இடைத்தேர்தல் சீமான் தொடர்ப் பரப்புரை – இன்றையப் பயணத்திட்டம்  (15-10-2019) | நாம் தமிழர் கட்சி

அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி – காமராஜர் நகர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நமது கட்சி சார்பாக “விவசாயி” சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், தொடர்ப் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக “விவசாயி” சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் சா.ராஜநாராயணன் அவர்களை ஆதரித்து  நேற்று 14-10-2019 திங்கட்கிழமை மாலை 6 மணியளவில் சீவலப்பேரி, செட்டிகுளம், கே.டி.சி.நகர், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில்  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பரப்புரை மேற்கொண்டார்.

இன்று 15-10-2019 செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் திருக்குறுங்குடி, களக்காடு, பெருமாள் குளம், ஏர்வாடி உள்ளிட்ட பகுதிகளில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084