க.எண்: 2019100165
நாள்: 15.10.2019
அறிவிப்பு: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் | வாக்குச்சாவடி முகவர் நியமனம் மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் குறித்த அவசரக் கலந்தாய்வு | நாம் தமிழர் கட்சி
எதிர்வரும் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலையொட்டி வாக்குச்சாவடி முகவர்கள் நியமனம் மற்றும் இறுதிக்கட்ட களப்பணிகளைத் திட்டமிடுவதற்காகவும், நாளை 16-10-2019 புதன்கிழமை பிற்பகல் 02 மணியளவில் தலைமை தேர்தல் குழு தலைமையில் அவசரக் கலந்தாய்வு நடைபெறவிருக்கிறது,
நாள்
நேரம் |
கலந்தாய்வுக்கான தொகுதிகள் | கலந்தாய்வு நடைபெறும் இடம் |
16-10-2019 புதன்
பிற்பகல் 02 மணி |
திருவண்ணாமலை, செங்கம், கீழ்பெண்ணாத்தூர்,கலசப்பாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி, விழுப்புரம், செஞ்சி, மயிலம், திண்டிவனம், வானூர், விக்கிரவாண்டி,திருக்கோயிலூர், உளுந்தூர்ப்பேட்டை, இரிசிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், பெரம்பலூர், குன்னம், செங்கல்பட்டு, உத்திரமேரூர் மற்றும் மதுராந்தகம் தொகுதிகள். | அடையார் ஆனந்தபவன் கூட்ட அரங்கம், விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகில் |
கலந்தாய்வின் போது மேற்காணும் தொகுதிகளைச் சேர்ந்த அனைத்து மாவட்டத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள், தொகுதித் தலைவர்கள், தொகுதிச் செயலாளர்கள் மட்டும் தவறாது உரிய நேரத்தில் பங்கேற்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இரா.இராவணன்
தேர்தல் செயலாளர்