வீரதமிழச்சி செங்கொடி 8ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை [புகைப்படங்கள் – காணொளி]

227

வீரதமிழச்சி செங்கொடி 8ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் | நாம் தமிழர் கட்சி – மகளிர் பாசறை

மூன்று தமிழர்களின் இன்னுயிரைக் காக்க தன்னுயிரை ஈந்த வீரத்தமிழச்சி செங்கொடியின் 8ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் நாம் தமிழர் மகளிர் பாசறை சார்பாக நேற்று 24-08-2019, சனிக்கிழமை மாலை 06 மணியளவில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம், சுங்குவார் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் நடைபெறீறது.

மாலை 06 மணியளவில் பறையிசை, சிலம்பம் போன்ற கலைநிகழ்சிகளுடன் தொடங்கியது.  பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் கட்சியின் புலிக்கொடி ஏற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து செங்கொடியின் திருவுருவப்படத்திற்கு முன் ஈகைச் சுடரேற்றி மலர் தூவி, வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

நிகழ்வுக்கான ஏற்பாடுகளை காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட உறவுகள் செய்திருந்தனர். மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அமுதா நம்பி, சீதாலட்சுமி ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்தனர். தமிழமுது, ரெஜிமா, வெற்றிச்செல்வி, பெர்சியா, தங்கமாரி, புதுவை கௌரி, பிரகலதா, கார்த்திகா, விஜயலட்சுமி, பாண்டிச்செல்வி, இளவஞ்சி, சீதாலட்சுமி, காளியம்மாள் ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினார்கள். இறுதியாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வீரவணக்கவுரையாற்றினார்.

 

 

 

https://youtu.be/RGPDLeDw1Po


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

முந்தைய செய்திஅமேசான் காடுகளின் பேரழிவு ஒட்டுமொத்த உலகிற்கே ஏற்பட்ட சூழலியல் பேராபத்து – சீமான் அறிக்கை
அடுத்த செய்திவேதாரண்யத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலையைத் தகர்த்த சமூக விரோதிகளைக் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்