முக்கிய அறிவிப்பு: மழை வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி உறவுகளுக்கு உதவுவோம்

20

முக்கிய அறிவிப்பு: மழை வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி உறவுகளுக்கு உதவுவோம் | நாம் தமிழர் கட்சி

நீலகிரியில் தொடர்ந்து 5 நாட்களாக கனமழை பொழிந்து பல இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பல மலைக் கிராமங்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. நீலகிரி மாவட்டத்தில் உள்ள அணைகளிலிருந்து அதிகளவு நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது. இதனால் ஆறுகள் மற்றும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவு விளை நிலங்கள் நீரில் மூழ்கின. நூற்றுக்கணக்கான வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நாளை மறுநாள் 15-08-2019 வியாழக்கிழமை நீலகிரிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து நிவாரண உதவிகள் வழங்கவிருக்கிறார். அவ்வயம் ஈரோடு, திருப்பூர், கோவை மற்றும் அருகாமை மாவட்டங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் உடன் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் தமிழகம் முழுவதுமிருந்து நாம் தமிழர் உறவுகள் தங்களால் இயன்ற நிவாரணப் பொருட்களைச் சேகரித்துக்கொண்டு நீலகிரி விரையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி         
அடுத்த செய்திபேரிடர் மிட்பு பயிற்சி வகுப்பு-அம்பத்தூர் தொகுதி