க.எண்: 2019080141
முக்கிய அறிவிப்பு: சமூக வலைதளங்களில் இயங்கும் நாம் தமிழர் உறவுகளின் கவனத்திற்கு
இலட்சக்கணக்கான தாய்த்தமிழ் உறவுகளின் நம்பிக்கையையும் ஆதரவையும் பெற்று, மாற்றத்திற்கான எளிய மக்களின் மாபெரும் அரசியல் புரட்சியாக, உயரிய கொள்கைப் பிடிப்போடும், உறுதியான தத்துவப் பிடிப்போடும், தொலைநோக்கு திட்டங்களை முன்னிறுத்தி அனைத்து உயிர்களுக்குமான அரசியல் களத்தில் தேசியக் கட்சிகளையும் திராவிடக் கட்சிகளையும் சாதி-மத அடிப்படைவாத கட்சிகளையும் எதிர்த்து நாம் தமிழர் கட்சி தனித்து பேரெழுச்சியாக வளர்ந்துவரும் இவ்வேளையில் கட்சி கட்டுப்பாடுகளை மீறி செயற்பட்டதனால் கட்சியில் இருந்து விலக்கப்பட்டவர்கள், விலகியவர்கள், வேற்று கட்சி சார்புடையவர்கள், தன்னை முன்னிறுத்த மறைமுகமாக வேலைசெய்பவர்கள் போன்றவர்களால் திட்டமிட்டு உள்கட்சி முரண்களை ஏற்படுத்துவதற்காக முகமூடி அணிந்து சமூக வலைதளங்களில் அவதூறு செய்திகளைப் பரப்பி வருகின்றனர்.
குறிப்பாக தமிழ்த்தேசியம், சீமான் காணொளிகள், மீண்டெழுவோம் போன்ற பெயர்களில் நாம் தமிழர் கட்சி ஆதரவு செய்திகளை, காணொளிகளைத் தொடர்ச்சியாகப் பதிவிட்டு கட்சியின் அதிகாரப்பூர்வ ஆதரவு பக்கம் போல் செயற்பட்டு, பரவலான நாம் தமிழர் உறவுகளின் விருப்பங்களைப் பெற்று தற்போது நாம் தமிழர் கட்சியினுள் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக அவதூறு செய்திகளைப் பரப்பி வருகின்றனர்.
ஊடகமற்ற நமக்கு, நாமே ஊடகமாக மாறுவதை தவிர வேறுவழியில்லை என்ற நிலையில் இயல்பாக சமூக வலைதளங்களில் நாம் மேற்கொண்டுவரும் கட்டுக்கோப்பான கட்சிக் கொள்கை பரப்புரை, இதுபோன்ற அவதூறுகளுக்கு பதிலளிக்க நமது உறவுகள் அதிக நேரம் செலவிடுவதால் தொய்வடைந்து வருகிறது. எனவே நாம் தமிழர் உறவுகள் இதுபோன்ற பெயர்களில் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இயங்கும் பக்கங்களைப் பின் தொடர்வதை முற்றிலுமாக தவிர்க்கவும். கட்சியின் அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் சமூக வலைதளப் பக்கங்களில் வரும் செய்திகளைப் பகிர்ந்து கட்சியின் வளர்ச்சிக்கு துணைநிற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்கள்
இணையதளம் (Website): https://www.naamtamilar.org/
உறுப்பினர் சேர்க்கை (Membership Portal): https://join.naamtamilar.org/
முகநூல் (Facebook)
கட்சி: https://www.facebook.com/NaamTamilarKatchiOfficial
https://www.facebook.com/groups/NaamTamilarKatchi/
தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: https://www.facebook.com/senthamizhanseeman/
கீச்சுகள் (Twitter):
கட்சி: https://twitter.com/NaamTamilarOrg
தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: https://twitter.com/SeemanOfficial
வலையொளி (YouTube):
கட்சி: https://www.youtube.com/NaamThamizharKatchi
https://www.youtube.com/Valaiyoli
–
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு