முக்கிய அறிவிப்பு: அரசருக்கு அரசன் அருண்மொழிச்சோழன் பெருவிழா அக்டோபர் 05 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது

86

முக்கிய அறிவிப்பு: அரசருக்கு அரசன் அருண்மொழிச்சோழன் பெருவிழா அக்டோபர் 05 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது

நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக வரும்  01-09-2019 ஞாயிறு அன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்த நமது வீரப்பெரும்பாட்டன் அரசருக்கு அரசன் அருண்மொழிச்சோழன் பெருவிழாவிற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில் பொதுக்கூட்ட அனுமதி குறித்த உறுதியான நிலைப்பாடு எட்டப்படாத நிலையில் தற்போது திட்டமிடப்பட்டதை விட பேரெழுச்சியாக மாபெரும் விழாவாக நடத்திடும் பொருட்டு அக்டோபர் மாதம் 05 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது.

நீதிமன்ற வழக்கின் மூலம் பெருவிழா அனுமதியை உறுதிசெய்து தடைகளை உடைத்து நமது பாட்டன் புகழ் போற்றும் பெருவிழாவை பேரெழுச்சியாக நடத்திட நாம் தமிழர் உறவுகள் உறுதியேற்போம்!

 

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகலந்தாய்வு கூட்டம்-கடையநல்லூர் தொகுதி
அடுத்த செய்திகாணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களின் நிலை என்ன? – சீமான் பத்திரிகையாளர் சந்திப்பு