கடந்த ஜூன் மாதம், கோவை மாவட்டம் ஆனைக்கட்டி அருகே மதுபோதையில் கண்மூடித்தனமாக வாகனத்தில் வந்த சிலர், மருத்துவர் ரமேசின் மனைவி ஷோபனா சென்ற வாகனத்தின் மீது கடுமையாக மோதியதில், சம்பவ இடத்திலேயே பலியானார் ஷோபனா. அவரது மகள் சாந்தலா படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தக் கொடூர சம்பவத்தால் நிலைகுலைந்துபோன குடும்பத்தை இன்று 17-08-2019 நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
#BanLiquor #BanTasmac #JusticeforShobana #JusticeForDrRamesh
