அறிவிப்பு: தரணி ஆண்ட தமிழ்ப்பேரரசன் இராசராசசோழன் பெருவிழா! | வீரத்தமிழர் முன்னணி

269

அறிவிப்பு: தரணி ஆண்ட தமிழ்ப்பேரரசன் இராசராசசோழன் பெருவிழா! | நாம் தமிழர் கட்சி – வீரத்தமிழர் முன்னணி
தெற்காசிய நாடுகள் முழுவதையும் தனது வல்லாண்மைமிக்கப் போர்த்திறத்தால் ஒற்றைக்குடையின் கீழ் கொண்டு வந்து ஆட்சிசெய்தப் தமிழ்ப்பேரரசன் நமது பாட்டன் இராசராசசோழன். முடியாட்சி ஆண்டாலும் குன்றாப்புகழ் கொண்ட குடியாட்சி செய்து மக்களின் மனங்களை வென்ற பெருமன்னன். நிதி, நிர்வாகம், சுகாதாரம், கல்வி, மொழிப்பாதுகாப்பு என அனைத்தையும் பற்றிச் சிந்தித்து மக்கள் நலன் சார்ந்த சனநாயக விழுமியங்களோடு மன்னராட்சி காலத்தை மக்களாட்சி காலமாக மாற்றிய மாமன்னன்.
தமிழ்ப்பேரினத்தின் ஒப்பற்றப் பெருமைமிகு அடையாளமாக இருக்கின்ற தமிழ்ப்பேரரசன் நமது பாட்டன் இராசராசசோழன் அவர்களின் புகழைப் போற்றும் வகையில் நாம் தமிழர் கட்சியின் பண்பாட்டு மீட்பு அமைப்பான வீரத்தமிழர் முன்னணி வருகின்ற செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி, தமிழர்களின் பெருமையாக இன்றும் வானுயர உயர்ந்திருக்கும் ‘இராசராசேச்சுரம்’ எனும் பெரியகோவில் அமைந்துள்ள தஞ்சை மாநகரில் ‘இராசராசசோழன் பெருவிழா’ நிகழ்வை நடத்தத் திட்டமிட்டு இருக்கிறது.
வரலாற்றுச் சிறப்புமிக்க இப்பெருவிழாவில் வரலாற்றுப் பேராசிரியர்கள், கல்வெட்டு அறிஞர்கள், வெளிநாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் என மாபெரும் புகழ் ஆளுமைகள் தங்களது வாழ்நாள் ஆய்வுக்கருத்துக்களைச் சிறப்புரையாக வழங்க இருக்கிறார்கள்.
என் உயிருக்கு இனிப்பான என் தாய்த்தமிழ் உறவுகள் மிக எழுச்சியாக நடைபெற உள்ள இப்பெருவிழா பற்றிய செய்திகளை உலகத்1தில் வாழ்கின்ற தமிழ்ச் சமூகத்திற்குக் கொண்டு சேர்க்கும் விதமாக இணையவழி பதிவுகள், சுவரெழுத்து, பதாகைகள் துண்டறிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு வழிகள் மூலம் பரப்பிட, பகிர்ந்திட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
விழா ஏற்பாடு பற்றிய விபரங்களுக்கு: +91-9442248351 (செந்தில்நாதன், வீரத்தமிழர் முன்னணி – மாநில ஒருங்கிணைப்பாளர்)

புரட்சி வாழ்த்துகளுடன்,

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்