செய்திக்குறிப்பு: வேலூர் நாடாளுமன்ற வேட்பாளர் தீபலட்சுமியை ஆதரித்து சீமான் பரப்புரை | இன்றையப் பயணத்திட்ட விவரம் – இரண்டாம் நாள் (29-07-2019 கீழ்வைத்தியனான் குப்பம் – வாணியம்பாடி ) | நாம், தமிழர் கட்சி
எதிர்வரும் ஆகத்து-05 அன்று நடைபெறவிருக்கும் வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக “விவசாயி” சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் தீபலட்சுமி அவர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், தொடர் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார்.
முதல்நாளான நேற்று 28-07-2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 05 மணியளவில் அணைக்கட்டு தொகுதிக்குட்பட்ட ஊசூர் கிராமம் குளத்துமேடு பகுதியில் நடைபெற்ற பரப்புரைப் பொதுக்கூட்டத்திலும் அதனைத்தொடர்ந்து இரவு 08 மணியளவில் வேலூர் தொகுதிக்குட்பட்ட சத்துவாச்சாரி பகுதியில் நடைபெற்ற பரப்புரைப் பொதுக்கூட்டத்திலும் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பரப்புரையாற்றினார்
அணைக்கட்டு:
சத்துவாச்சாரி:
இரண்டாம்நாளான இன்று பரப்புரைக்காகத் திட்டமிடப்பட்டிருந்த பரப்புரைப் பயணத்திட்டம் மாறுதல் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு;
29-07-2019 திங்கட்கிழமை மாலை 04 மணியளவில் கீழ்வைத்தியனான் குப்பம் பேருந்து நிலையம் அருகிலும்
இரவு 08 மணியளவில் வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட காதர்பேட்டை சந்தைமேடு அருகிலும் நடைபெறவிருக்கும் பரப்புரைப் பொதுக்கூட்டங்களில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பரப்புரை நிகழ்த்துகிறார்.
புதியதொரு தேசம் செய்வோம்!
மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம்!
உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!
நமது சின்னம் “விவசாயி”
வலைதளம்: http://www.naamtamilar.org/
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084