முக்கிய அறிவிப்பு
——————————–
நாம் தமிழர் கட்சியின் மதுரை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் வண்டாரி தமிழ் மணி அவர்களின் மனைவி தீக்குளித்தது தொடர்பாக எழுதப்பட்டு வருகிற பல்வேறு செய்திகள் உண்மையற்ற செய்திகளாகும் . உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்த விளக்கங்களை வண்டாரி தமிழ் மணியும் அவரது மனைவியும் காவல்துறையிடம் வாக்குமூலமாக வழங்கிவிட்ட நிலையில் விரும்பத்தகாத செய்திகள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் மூலமாகவும், உட்கட்சி முரண்களால் விலகி நிற்பவர்கள் மூலமாகவும் பரப்பப்படுவதை நம் உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும்.
இது போன்ற செய்திகள் கட்சியினரிடையே பரப்பப்படுவதன் நோக்கங்களை நம் உறவுகள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தி நம் கட்சியைப் பற்றி எதிர்மறை எண்ணங்களை உருவாக்க வேண்டும் என்கின்ற நோக்கத்தில் செயல்படுபவர்களின் பதிவுகளை நம் உறவுகள் புறந்தள்ள வேண்டும் எனவும் அவரவர் நோக்கத்திற்கு தகுந்தவாறு இந்த சூழ்நிலையை பயன்படுத்தி தவறான செய்திகளை பரப்புவதற்கு நாம் இடமளித்து விடக்கூடாது எனவும் இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.
மிகவும் வலி மிகுந்த இத்தருணத்தில் நமது உறவு வண்டாரி தமிழ்மணியோடு உடன் இருப்பதே முதன்மையான பணி. நமது உறவு தமிழ்மணியின் மனைவி முழு நலம் பெற்று விரைவில் வீடு திரும்புவார் என்ற நமது நம்பிக்கை உறுதியாக வெல்லும். இத்தருணத்தை பயன்படுத்திக்கொண்டு வதந்தி மற்றும் பொய் செய்திகளை பரப்புவோரிடத்தில் நம் உறவுகள் கவனமாக இருக்க வேண்டும் என இதன்மூலம் அறிவுறுத்தப்படுகிறது.
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி