சுற்றறிக்கை: வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019 | அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் மாநிலக் கட்டமைப்புக் குழு கலந்தாய்வு | நாம் தமிழர் கட்சி
எதிர்வரும் ஆகத்து ௦5ஆம் தேதி நடைபெறவிருக்கும் வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக தீபலட்சுமி அவர்கள் “விவசாயி” சின்னத்தில் போட்டியிடுவார் என தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நேற்று அறிவித்திருந்தார். அதனையொட்டி வரும் *சூலை 12ஆம் தேதி* வெள்ளிக்கிழமையன்று, பிற்பகல் 02 மணியளவில் வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பத்மாவதி சீனிவாசலு திருமண மண்டபத்தில் (பொய்கை), *மாநிலக் கட்டமைப்புக் குழுப் பொறுப்பாளர்கள் தலைமையில், வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட வேலூர், அணைக்கட்டு, கே.வி. குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், பரப்புரைத் திட்டம், களப்பணிகள் பகிர்வு குறித்து கலந்துரையாடி முடிவு எடுக்கப்படவிருக்கிறது.
அவ்வயம் *வேலூர் நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி, நகரம், வட்டம், ஒன்றியம், பகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அனைத்து பாசறைப் பொறுப்பாளர்களும்* தவறாமல் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!
நமது சின்னம் “விவசாயி”