க.எண்: 2019070137
நாள்: 30.07.2019
அறிவிப்பு: வேலூர் நாடாளுமன்ற வேட்பாளரை ஆதரித்து சீமான் தலைமையில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் – வேலூர் மாநகராட்சி | நாம் தமிழர் கட்சி
மாபெரும் பேரணி – வேலூர்எதிர்வரும் ஆகத்து-05 அன்று நடைபெறவிருக்கும் வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக “விவசாயி” சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் தீபலட்சுமி அவர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில், நாளை 31-07-2019 புதன்கிழமை, மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.
நாள்: 31-07-2019 புதன்கிழமை
பேரணி:
வேலூர் மாநகராட்சி
பிற்பகல் 02 மணிமுதல் இரவு 07 மணிவரை
தொடங்குமிடம்: முள்ளிப்பாளையம், மாங்காய் மண்டி
பொதுக்கூட்டம்:
இரவு 07 மணியளவில்
இடம்: சங்கரன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில்
அவ்வயம் மாநில, மாவட்ட, தொகுதி, நகரம், பகுதி, ஒன்றியம், கிளை உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், தேர்தல் பணிக்குழுப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகள் அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இரா.இராவணன்
தேர்தல் செயலாளர்