அறிவிப்பு: சீமான் பங்கேற்கும் முதல்நாள் பரப்புரைப் பொதுக்கூட்டங்கள் | நாம் தமிழர் கட்சி

77

க.எண்: 2019070136

நாள்: 27.07.2019

அறிவிப்பு: வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் முதல்நாள் பரப்புரைப் பொதுக்கூட்டங்கள் | நாம் தமிழர் கட்சி

எதிர்வரும் ஆகத்து-05 அன்று நடைபெறவிருக்கும் வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் தீபலட்சுமி அவர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், நாளை முதல் தொடர் பரப்புரையில் ஈடுபடவிருக்கிறார்.

முதல்நாள் பரப்புரைக்காகத் திட்டமிடப்பட்டிருந்த பரப்புரைப் பயணத்திட்டம் மாறுதல் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு

28-07-2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 04 மணியளவில் அணைக்கட்டு தொகுதிக்குட்பட்ட ஊசூர் கிராமத்திலும் (குளத்துமேடு)

இரவு 08 மணியளவில் வேலூர் தொகுதிக்குட்பட்ட சத்துவாச்சாரி கிராமத்திலும் பரப்புரைப் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.

அவ்வயம் அணைக்கட்டு மற்றும் வேலூர் தொகுதி களப்பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், கடலூர், இராமநாதபுரம், புதுச்சேரி, திருவள்ளூர், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் அனைவரும், தத்தம் தொகுதி தேர்தல் பணிக்குழுவினருடன் இணைந்து தேர்தல் களப்பணியாற்ற வேண்டுமாயின் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இரா.இராவணன்

தேர்தல் செயலாளர்