தகவல் தொழில்நுட்பப் பிரிவின் கலந்தாய்வு மற்றும் பயிற்சிக் கூட்டம்

17

தகவல் தொழில்நுட்பப் பிரிவின் கலந்தாய்வு மற்றும் பயிற்சிக் கூட்டம் | நாம் தமிழர் கட்சி

2019 ஆம் ஆண்டிற்கான தகவல் தொழில்நுட்பப் பிரிவின் கலந்தாய்வு மற்றும் பயிற்சிக் கூட்டம் நேற்று மே 5ஆம் தேதி திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகில் உள்ள பி.எல்.ஏ. ரத்னா ரூபி ஹால் (PLA Rathna Ruby Hall) என்ற அரங்கில் நண்பகல் 1 மணி முதல் 6 மணிவரை நடைபெற்றது. இந்த கலந்தாய்வுக் கூட்டத்திற்கு அனைத்து தொகுதிகளில் இருந்தும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் மற்றும் செய்தித் தொடர்பாளர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் அடுத்த ஒரு ஆண்டிற்கான தகவல் தொழில்நுட்பப் பிரிவின் வேலை திட்டங்கள் மற்றும் அதை செயல் முறைபடுத்த செயலில் கொண்டுவரவிருக்கும் புதிய வசதிகளை பற்றி விவாதிக்கப்பட்டது. மாநில செய்தி தொடர்பாளர் திரு.பாக்கியரசன் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.மதன் முன்னிலை வகித்து பொறுப்பாளர்களின் செயலி தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி