சுற்றறிக்கை: *மறுவாக்குப்பதிவு நடத்தப்படவிருக்கும் 13 வாக்குச்சாவடிகள் விவரம் – தேர்தல் பொறுப்பாளர்கள் கவனத்திற்கு* | நாம் தமிழர் கட்சி
தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படவிருக்கும் 13 வாக்குச்சாவடிகள் விவரம்:
1. ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் உள்ள 248-வது வாக்குச்சாவடி
2. தேனி நாடாளுமன்றத் தொகுதி மற்றும் ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாலசமுத்திரம் கம்மவார் சரஸ்வதி நடுநிலைப்பள்ளியில் உள்ள 67-வது வாக்குச்சாவடி
3. தேனி நாடாளுமன்றத் தொகுதி மற்றும் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வடுகப்பட்டி சங்கரநாராயணா நடுநிலைப் பள்ளியில் உள்ள 197-வது வாக்குச்சாவடி
4. திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் உள்ள 195-ம் வாக்குச்சாவடி
5. கடலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட (பண்ருட்டி) திருவதிகை நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் உள்ள 210-வது வாக்குச்சாவடி.
6-13. தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அய்யம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் 181 மற்றும் 182-ம் வாக்குச்சாவடிகள். நத்தமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள 192, 193, 194 மற்றும் 195 ஆகிய வாக்குச்சாவடிகள். ஜல்லிப்புதூரில் உள்ள பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் உள்ள 196 மற்றும் 197-ம் வாக்குச்சாவடிகள் ஆகிய 8 வாக்குச்சாவடிகள்.
மொத்தமாக 13 வாக்குச்சாவடிகளில் வருகின்ற மே-19ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறவிருப்பதால் ஈரோடு, தேனி(ஆண்டிப்பட்டி, பெரியகுளம்), திருவள்ளூர்(பூந்தமல்லி), கடலூர் (பண்ருட்டி), தர்மபுரி(பாப்பிரெட்டிப்பட்டி) ஆகிய நாடாளுமன்ற/சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் தத்தம் தொகுதிகளில் கலந்தாய்வு நடத்தி உரிய களப்பணிகளை விழிப்புடன் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!
நமது சின்னம் “விவசாயி”
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி