அறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – முதலாம் நாள் (04-05-2019) | நாம் தமிழர் கட்சி
இன்று 04-05-2019 மாலை 05 மணியளவில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் இரா.ரேவதி அவர்களை ஆதரித்து அனுப்பானடி, தீயணைப்பு நிலையம் அருகில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திலும் அதனைத் தொடர்ந்து இரவு 08 மணியளவில் திருப்பரங்குன்றம்,
16 கால் மண்டபம் அருகிலும் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திலும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பரப்புரை மேற்கொள்கிறார்.
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
குறிப்பு: அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அவணியாபுரம் பொதுக்கூட்டம் இரத்து செய்யப்பட்டதால் பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் நேரம் மாற்றப்பட்டுள்ளது.