அறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் – எட்டாம் நாள் (11-05-2019 அரவக்குறிச்சி) | நாம் தமிழர் கட்சி
எதிர்வரும் மே-19 அன்று நடைபெறவிருக்கும் *சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம்* ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. *“விவசாயி”* சின்னத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் *சீமான்* அவர்கள், கடந்த 04-05-2019 முதல் 17-05-2019 வரை தொடர் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார்.
எட்டாம் நாளான இன்று 11-05-2019 சனிக்கிழமை மாலை 04 மணியளவில் *அரவக்குறிச்சி* சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் *ப.கா.செல்வம்* அவர்களை ஆதரித்து *சின்னதாராபுரம் பேருந்து நிலையம் அருகில்* நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திலும் அதனைத் தொடர்ந்து இரவு 07 மணியளவில் *பள்ளப்பட்டி ஷா நகர் கார்னரில்* நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திலும் பரப்புரை மேற்கொள்கிறார்.
இரவுப் பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ வலையொளி (YouTube channel) பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும்.
இணைப்பு:
https://www.youtube.com/c/NaamThamizharKatchi/live
புதியதொரு தேசம் செய்வோம்!
மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம்!
உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!
நமது சின்னம் “விவசாயி”
வலைதளம்: http://www.naamtamilar.org/
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084