அறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் – ஏழாம் நாள் (10-05-2019 சூலூர்)

70

அறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் – ஏழாம் நாள் (10-05-2019 சூலூர்) | நாம் தமிழர் கட்சி

எதிர்வரும் மே-19 அன்று நடைபெறவிருக்கும் *சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம்* ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. *“விவசாயி”* சின்னத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் *சீமான்* அவர்கள், கடந்த 04-05-2019 முதல் 17-05-2019 வரை தொடர் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார்.

ஏழாம் நாளான இன்று 10-05-2019 வெள்ளிக்கிழமை மாலை 05 மணியளவில் *சூலூர்* சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் வழக்கறிஞர் *வெ.விஜயராகவன்* அவர்களை ஆதரித்து *கண்ணம்பாளையம் தியாகிகள் நினைவரங்கத்தில்* நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திலும் அதனைத் தொடர்ந்து இரவு 08 மணியளவில் *இருகூர்சுங்கத்தில்* நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திலும் பரப்புரை மேற்கொள்கிறார்.

இரவுப் பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ வலையொளி (YouTube channel) பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும்.

இணைப்பு:

https://www.youtube.com/c/NaamThamizharKatchi/live

புதியதொரு தேசம் செய்வோம்!
மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம்!

உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!

நமது சின்னம் “விவசாயி”

வலைதளம்: http://www.naamtamilar.org/


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

முந்தைய செய்திஎழுவரின் விடுதலைக்கெதிரான வழக்குகள் யாவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் உடனடியாக விடுதலைக்கோப்பில் ஆளுநர் கையெழுத்திட வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திசூலூர் வேட்பாளரை ஆதரித்து சீமான்  பரப்புரை | முரசொலி தலையங்கம்..! – சீமான் பதிலடி