செய்திக் குறிப்பு: வட சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை | நாம் தமிழர் கட்சி
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல், மற்றும் 19 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. “விவசாயி” சின்னத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், 25-03-2019 முதல் 16-04-2019 வரை தமிழகம் மற்றும் புதுவை முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொடர் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார்.
இருபதாம் நாளான நேற்று 13-04-2019 சனிக்கிழமை மாலை 05 மணியளவில், வட சென்னை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் பி.காளியம்மாள், அவர்களை ஆதரித்து இராயபுரம் பொதுக்கூட்டத்தில் (பரத் திரையரங்கம் அருகில்) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பரப்புரை மேற்கொண்டார்.
காணொளி: https://www.youtube.com/watch?v=aqSv92aqekY
இரவு 07 மணியளவில், வட சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் பி.காளியம்மாள், மற்றும் பெரம்பூர் சட்டமன்ற வேட்பாளர் செ.மெர்லின் சுகந்தி ஆகியோரை ஆதரித்து பெரம்பூர் பொதுக்கூட்டத்தில் (சத்தியமூர்த்தி நகர், அந்தோணியார் கோவில் அருகில்) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பரப்புரை மேற்கொள்கிறார்.
இரவு 09 மணியளவில், மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் மருத்துவர் கார்த்திகேயன், அவர்களை ஆதரித்து எழும்பூர் பொதுக்கூட்டத்தில் (தானா தெரு) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பரப்புரை மேற்கொண்டார்.
காணொளி: https://www.youtube.com/watch?v=_mSSZWXkr1M
இன்றைய தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – இருபத்தொன்றாம் நாள் (14-04-2019) | நாம் தமிழர் கட்சி
14-04-2019 ஞாயிற்றுக்கிழமை, மாலை 05 மணியளவில், தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் அ.ஜெ.ஷெரின், அவர்களை ஆதரித்து சோழிங்கநல்லூர் பொதுக்கூட்டத்தில் (கந்தன்சாவடி ஆதிபராசக்தி மண்டபம் அருகில்) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை. மேற்கொள்கிறார்.
அதனைத் தொடர்ந்து இரவு 07 மணியளவில், தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் அ.ஜெ.ஷெரின், அவர்களை ஆதரித்து அடையாறு பொதுக்கூட்டத்தில் (பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகில்) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை. மேற்கொள்கிறார்
அதனைத் தொடர்ந்து இரவு 09 மணியளவில், மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் மருத்துவர் கார்த்திகேயன், அவர்களை ஆதரித்து டி.பி.சத்திரம் பொதுக்கூட்டத்தில் (பச்சையப்பன் கல்லூரி எதிரில்) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை.
நாளைய தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – இருபத்திரண்டாம் நாள் (15-04-2019) | நாம் தமிழர் கட்சி
15-04-2019 திங்கட்கிழமை மாலை 05 மணியளவில், பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பூ.பாரதிப்பிரியா, அவர்களை ஆதரித்து குமணஞ்சாவடி பொதுக்கூட்டத்தில் (பேருந்து நிறுத்தம் அருகில்) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொள்கிறார்.
அதனைத் தொடர்ந்து இரவு 07 மணியளவில், திருபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ஈரா.மகேந்திரன் அவர்களை ஆதரித்து அம்பத்தூர் பொதுக்கூட்டத்தில் (ராக்கி திரையரங்கம் அருகில்) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொள்கிறார்.
அதனைத் தொடர்ந்து இரவு 09 மணியளவில், திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ம.வெற்றிச்செல்வி அவர்களை ஆதரித்து செங்குன்றம் பொதுக்கூட்டத்தில் (பேருந்து நிலையம் அருகில்) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை. மேற்கொள்கிறார்.
புதியதொரு தேசம் செய்வோம்!
புரட்சியால் அதை உறுதி செய்வோம்!
நமது சின்னம் “விவசாயி”
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084