பூந்தமல்லி, திருவள்ளூர், திருபெரும்புதூர் வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை

596

செய்திக் குறிப்பு: பூந்தமல்லி, திருவள்ளூர், திருபெரும்புதூர் வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை | நாம் தமிழர் கட்சி

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல், மற்றும் 19 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது.  “விவசாயி” சின்னத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், 25-03-2019 முதல் 16-04-2019 வரை தமிழகம் மற்றும் புதுவை முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொடர் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார்.

இருபத்திரண்டாம் நாளான நேற்று 15-04-2019 திங்கட்கிழமை மாலை 05 மணியளவில், பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பூ.பாரதிப்பிரியா, அவர்களை ஆதரித்து குமணஞ்சாவடி பொதுக்கூட்டத்தில் (பேருந்து நிறுத்தம் அருகில்) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.

காணொளி: https://www.youtube.com/watch?v=OSahiuEOjt4

அதனைத் தொடர்ந்து இரவு 07 மணியளவில், திருபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ஈரா.மகேந்திரன் அவர்களை ஆதரித்து அம்பத்தூர் பொதுக்கூட்டத்தில் (ராக்கி திரையரங்கம் அருகில்) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை  மேற்கொண்டார்.

காணொளி: https://www.youtube.com/watch?v=mWXjkhx4CXU

அதனைத் தொடர்ந்து இரவு 09 மணியளவில், திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்  ம.வெற்றிச்செல்வி அவர்களை ஆதரித்து செங்குன்றம் பொதுக்கூட்டத்தில் (பேருந்து நிலையம் அருகில்) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை..மேற்கொண்டார்.

காணொளி: https://www.youtube.com/watch?v=XpTSwWbH2CA

இன்றைய தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – இருபத்தி மூன்றாம் நாள் (16-04-2019) | நாம் தமிழர் கட்சி

16-04-2019 செவ்வாய்க்கிழமை, மாலை 03 மணியளவில், வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து தி.நகர் பொதுக்கூட்டத்தில் (பேருந்து நிலையம் அருகில்)  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை. மேற்கொள்கிறார்.

புதியதொரு தேசம் செய்வோம்!

புரட்சியால் அதை உறுதி செய்வோம்!

நமது சின்னம் “விவசாயி”


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

முந்தைய செய்திஅறிவிப்பு: வாக்குப்பதிவு எந்திரத்தில் தெளிவற்று அச்சடிக்கப்பட்டுள்ள விவசாயி சின்னம் – சீமான் பத்திரிகையாளர் சந்திப்பு | சென்னை(சேப்பாக்கம்)
அடுத்த செய்திநாம் தமிழர் வேட்பாளர்கள் பெயர், புகைப்படம், வரிசை எண் விவரம்