சிதம்பரம், பெரம்பலூர் நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை

181

செய்திக் குறிப்பு: சிதம்பரம், பெரம்பலூர் நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை | நாம் தமிழர் கட்சி

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல், மற்றும் 19 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது.  “விவசாயி” சின்னத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், 25-03-2019 முதல் 16-04-2019 வரை தமிழகம் மற்றும் புதுவை முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொடர் பரப்புரையில்ஈடுபட்டுவருகிறார்.

பதினேழாம் நாளான நேற்று 10-04-2019 புதன்கிழமை மாலை 05 மணியளவில், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்   மு.சிவஜோதி அவர்களை ஆதரித்து அரியலூர், ஆயிரங்கால் மண்டபம் சாலை அருகில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.

காணொளி: https://www.youtube.com/watch?v=PwyZe7UVGf0

அதனைத் தொடர்ந்து இரவு 08 மணியளவில், பெரம்பலூர்நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் * க.சாந்தி* அவர்களை ஆதரித்து துறையூர், பாலக்கரை அருகில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.

காணொளி: https://www.youtube.com/watch?v=IJvrFv_f00s

இன்றைய தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – பதினெட்டாம் நாள் (11-04-2019) | நாம் தமிழர் கட்சி

11-04-2019 வியாழக்கிழமை மாலை 05 மணியளவில், கரூர்நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்   மருத்துவர் கருப்பையாஅவர்களை ஆதரித்து கரூர்,80 அடி சாலை அருகில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொள்கிறார்.

அதனைத் தொடர்ந்து இரவு 08 மணியளவில், திருச்சிநாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் வி.வினோத் அவர்களை ஆதரித்து திருச்சி,கீழ்புதூர்,காஜாப்பேட்டை,நாகநாதர் தேநீர் கடை அருகில் .தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொள்கிறார்

நாளைய தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – பத்தொன்பதாம் நாள் (12-04-2019) | நாம் தமிழர் கட்சி

12-04-2019 வெள்ளிக்கிழமை மாலை 05 மணியளவில், தூத்துக்குடிநாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ரா.கிறிஸ்டன்டைன் ராஜசேகர் அவர்களை ஆதரித்து திருச்செந்தூர், காயல்பட்டிணம்,சிவகாதி திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொள்கிறார்.

அதனைத் தொடர்ந்து இரவு 08 மணியளவில், விருதுநகர்நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் கா.அருள்மொழிதேவன்அவர்களை ஆதரித்து சிவகாசி,பாவடி தோப்பு,பத்ரகாளி அம்மன் கோவில் அருகில் .தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொள்கிறார்.

 

புதியதொரு தேசம் செய்வோம்!
புரட்சியால் அதை உறுதி செய்வோம்!

நமது சின்னம் “விவசாயி”


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084